search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திமுக செயல்வீரர்கள் கூட்டம்"

    திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யவேண்டும் என திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. #mkstalin

    திருவாரூர்:

    திருவாரூர் நகர அலுவலகத்தில் கலைஞருக்கு அஞ்சலி கூட்டம் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் அவரது உருவப் படத்திற்கு கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். கருணாநிதி கட்டி காத்த தி.மு.க.வை வழிநடத்த தகுதி பெற்றவர் மு.க.ஸ்டாலின். எனவே அவரை தி.மு.க. தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும் என கூட்டத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட்டு 13 முறையும் வெற்றி பெற்று தோல்வியே காணாது 5 முறை முதல்வராக பதவி வகித்த மறைந்த கலைஞருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர் மதிவாணன், எம்.எல்.ஏ.க்கள். டி.ஆர்.பி.ராஜா, ஆடலரசன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பாலு, தியாகபாரி, நகர, ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  #mkstalin

    காரியாபட்டி ஒன்றிய, நகர தி.மு.க. சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் தென்னரசு எம்எல்ஏ பங்கேற்றார்.

    காரியாபட்டி:

    காரியாபட்டி ஒன்றிய, நகர தி.மு.க. சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்லம் தலைமையில் நடந்தது. நகரச் செயலாளர் செந்தில் முன்னிலை வகித்தார்.

    முன்னாள் அமைச்சர் தங்கப்பாண்டியனின் 21-ம் ஆண்டு நினைவு அஞ்சலி வருகிற 31-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி மல்லாங்கிணற்றில் இருந்து தங்கப்பாண்டியன் சமாதிக்கு மவுன ஊர்வலம் நடைபெற உள்ளது.

    இதில் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பாக நடத்த வேண்டும் என்றும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

    கூட்டத்தில் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ பேசியதாவது:-

    தற்போது ஒவ்வொரு கிராமம் வாரியாக பூத் கமிட்டி அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பூத் கமிட்டியை பார்வையிட்டு ஆய்வு செய்ய தலைமை நிர்வாகிகள் வர உள்ளனர்.

    அவர்களிடம் நூறு சதவீதம் பூத் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது என்பதை நிரூபிக்க வேண்டும்.

    ஏனென்றால் நாடாளு மன்றத்திற்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் வர உள்ளது. தற்போது தமிழகத்தில் உள்ள சூழ்நிலையை பார்க்கும் போது தமிழகத்திலும் சட்டமன்ற தேர்தல் வரும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு பூத் கமிட்டியை முழுமையாக அமைக்க வேண்டும்.

    இவ்வார் அவர் பேசினார்.

    முன்னாள் யூனியன் துணைத் தலைவர் மணி, மாவட்ட பொருளாளர் வேலுச்சாமி, ஒன்றிய அவைத் தலைவர் மகேந்திரசாமி மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் தமிழ்வாணன், தோப்பூர் தங்கப்பாண்டியன், குரண்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிவசக்தி, மாவட்ட துணைச் செயலளார் சம்பத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×